தேசிய சொத்துக்கள் விற்பனை – பாரிய மக்கள் போராட்டம்

Posted by - January 4, 2017

தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் ஒன்று உருவெடுக்கும் என என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் சொத்துக்கள் மற்றும் மக்களின் உடமைகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களுக்கு தெளிவுப்படுத்தும் செயற்திட்டம் இன்று கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமானது. இந்த விடயத்தை தெளிவுப்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம்

Posted by - January 4, 2017

மாவட்ட அரச களஞ்சியங்களில் உள்ள நெல்லை வெளி மாவட்ட ஆலை உரிமையார்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வவுனியாவில் தற்போது நெல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை நிவர்த்தி செய்ய மாவட்ட அரச களஞ்சியங்களில் உள்ள நெல்லை வெளி மாவட்ட ஆலை உரிமையார்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நெல்லை வெளி மாவட்ட ஆலை உரிமையாளர்களுக்கு வழங்குவதனால் வவுனியா மாவட்ட ஆலை உரிமையாளர்கள் நட்டமடைவதுடன்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடன் விடுவிக்க வேண்டும் – ஸ்டாலின்

Posted by - January 4, 2017

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடன் விடுவிக்குமாறு, திராவிட முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட கட்சியின் பொருளாலரும் செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இலங்கை கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க மத்திய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜனவரி 5ஆம் திகதி தமிழக முன்னாள் முதலமைச்சர்

ஹக்கல தாவரவியல் பூங்காவின் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்பு

Posted by - January 4, 2017

நுவரெலியா மாவட்டத்தில் ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாபயணிகள், தாங்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுகளை பூங்காவிலும், வீதியோரம் மற்றும் வனப்பகுதிகளிலும் வீசிச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அருகில் குப்பைத்தொட்டியொன்று வைக்கப்பட்டிருந்தாலும் அதனுள் குப்பைகளை போடாது வெளியிடங்களில் வீசியெறிந்துவிட்டு செல்வதால், பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் தங்களது உணவு பொருட்களை ஆங்காங்கே

உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான 16 வங்கி கணக்குகள் முடக்கம்

Posted by - January 4, 2017

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான 16 வங்கி கணக்கு செயற்பாடுகளை முடக்குமாறு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு – கோட்டை முதன்மை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவு விடுத்த கோரிக்கை ஆராயப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிக்யானா கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பணச்சலவை சட்டத்தின் கீழ் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக

பொதுசுகாதார பரிசோதக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கும் இடையிலான  பேச்சுவார்தையில் இணக்கம் (காணொளி)

Posted by - January 4, 2017

பொது சுகாதார பரிசோதகர்கள் தமது பணிப்புக்கணிப்பு தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கும் பொது சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டமையை அடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளனர். இடமாற்றம் வழங்கப்பட்ட பொது சுகாதார உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தை நிறுத்துவது பொது சுகாதார பரிசோதகர்களின் இடமாற்றக்கொள்கையில் தொழில் சங்கங்களின் ஆலோசானைகளை உள்வாங்கிக் கொள்வது, இடமாற்ற சபையில் தொழிற்சங்க உறுப்பினர்களை இணைந்துக் கொள்ளல்

எல்லை மீள்நிர்ணய குழு – சுதந்திர கட்சி பிரதிநிதி கைச்சாத்து

Posted by - January 4, 2017

எல்லை மீள்நிர்ணய மேன்முறையீடு விசாரணை குழு தயாரித்த அறிக்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதியான முன்னாள் ஆளுநர் சாலிய மெத்திவ் கைச்சாத்திட்டுள்ளார். அந்த குழுவின் தலைவர் அசோக பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். குறித்த குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையை கையேற்க உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மறுப்பு தெரிவித்திருந்தார். குறித்த அறிக்கையில் இரண்டு பிரதான கட்சிகளையும் அங்கத்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கைச்சாத்திடாமை காரணமாகவே அமைச்சர் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தநிலையிலே இந்த

மாத்தறை நகரிலுள்ள உணவக வர்த்தகர் மீது தாக்குதல் (காணொளி)

Posted by - January 4, 2017

மாத்தறை நகரிலுள்ள உணவகமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த சிலர், வர்த்தகர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதா எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.மூன்று பேரை கொண்ட குழுவொன்றினால் குறித்த வர்த்தகர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குறித்த நபர்கள் வர்த்தகருக்கு கத்தியை கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் வர்த்தக நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகர் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்க புதிய சட்டம் – அமைச்சரவை அனுமதி

Posted by - January 4, 2017

வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்கவும் அதனை வர்த்தமானியில் பிரசுரிக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது. இது தொடர்பில் முன்னதாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தின் கால எல்லை 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதன்போது நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவினால் குறித்த புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கே தற்போது அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

முகவர்களின் முடிவு குறித்து லொத்தர் சபை கவலை

Posted by - January 4, 2017

லொத்தர் விற்பனை முகவர்கள் தொடர்பில் பெற்றுக் கொடுக்கும் தரகுக் கூலியை அதிகரிக்க தீர்மானித்துள்ள போதும், அதற்கு அவர்கள் இணங்காமையானது கவலைக்குரிய விடயம் என தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.