ஹக்கல தாவரவியல் பூங்காவின் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்பு

246 0

hatton-04-01-2017-2நுவரெலியா மாவட்டத்தில் ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாபயணிகள், தாங்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுகளை பூங்காவிலும், வீதியோரம் மற்றும் வனப்பகுதிகளிலும் வீசிச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

அருகில் குப்பைத்தொட்டியொன்று வைக்கப்பட்டிருந்தாலும் அதனுள் குப்பைகளை போடாது வெளியிடங்களில் வீசியெறிந்துவிட்டு செல்வதால், பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் தங்களது உணவு பொருட்களை ஆங்காங்கே கொட்டுவதால், குரங்குகள், கட்டகாலி நாய்கள் மற்றும் பறவைகள் உணவுகளை உண்பதுடன், ஊணவுகளைஅவ்விடங்களிலிருந்து தூக்கி செல்வதால் வீதிகள் மாசடைவதுடன் குப்பைகள் வீதிகளில் பரவக்கூடியநிலை காணப்படுகின்றது.

சுற்றுலா பயணிகள் வீசிச்செல்லும் யோகட் வெற்றுக் கோப்பைகள், பொலித்தீன் பைகள் ஆகியவற்றில் நீர் நிறைந்து நுளம்பின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பும் காணப்படுகின்றது.

எனவே ஹக்கல பூங்காவிற்குவரும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை வீதியோரங்களில் வீசிச் செல்லாது அவ்விடங்களில் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டிகளில் குப்பைகளை போட்டு சென்றால் சூழலை பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

hatton-04-01-2017-5 hatton-04-01-2017-4 hatton-04-01-2017-3 hatton-04-01-2017-1