தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடன் விடுவிக்க வேண்டும் – ஸ்டாலின்

33 0

mk_stalin_10இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடன் விடுவிக்குமாறு, திராவிட முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்ட கட்சியின் பொருளாலரும் செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இலங்கை கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க மத்திய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி 5ஆம் திகதி தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் காலமானதைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்ற கழகம் இன்று இந்த செயற்குழு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.

இதன்போது இலங்கை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.