உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான 16 வங்கி கணக்குகள் முடக்கம்

29 0

udayanga-weeratunga-moscow_ciரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான 16 வங்கி கணக்கு செயற்பாடுகளை முடக்குமாறு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை முதன்மை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவு விடுத்த கோரிக்கை ஆராயப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிக்யானா கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பணச்சலவை சட்டத்தின் கீழ் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச காவற்துறை ஊடாக கைது செய்வதற்கான நீதிமன்ற அழைப்பாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.