எல்லை மீள்நிர்ணய குழு – சுதந்திர கட்சி பிரதிநிதி கைச்சாத்து

28 0

ce295c14407ef991a08b3dc3e54db04d_lஎல்லை மீள்நிர்ணய மேன்முறையீடு விசாரணை குழு தயாரித்த அறிக்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதியான முன்னாள் ஆளுநர் சாலிய மெத்திவ் கைச்சாத்திட்டுள்ளார்.

அந்த குழுவின் தலைவர் அசோக பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையை கையேற்க உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மறுப்பு தெரிவித்திருந்தார்.

குறித்த அறிக்கையில் இரண்டு பிரதான கட்சிகளையும் அங்கத்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கைச்சாத்திடாமை காரணமாகவே அமைச்சர் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலே இந்த அறிக்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரதிநிதி கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.