நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதில் தேசிய அரசாங்கத்திற்குள் மோதல்!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிப்பது தொடர்பில் தேசிய அரசாங்கத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிப்பது தொடர்பில் தேசிய அரசாங்கத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி. வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லையென சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு 8ஆம் இலக்க நீதிமன்றத்தில் நடைபெறும் தமிழ் அரசியல் கைதிகள் 38பேரின் வழக்குகளை ஹோமாகம நீதிமன்றத்திற்கு மாற்றுவதை தடுப்பது குறித்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் இலஞ்சம் பெறுகின்றார்கள் என அனேகர் கூறுகின்ற போதிலும் அது தொடர்பிலான முறைப்பாடுகள் யாழில் கிடை க்கப்பெறுவதில்லை என யாழ் மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் கணேசராஜா தெரிவித்தார்.
‘உலக வரலாற்றில் யாரும் சாதிக்காத ஒன்றை நான் சாதித்திருக்கிறேன். உலக அளவில் அதிக ஆண்டுகள் சிறைவாசியாக இருந்த பெண்மணி என்றாகி இருக்கிறேன். இதை முறியடிக்கும் வாய்ப்பு இனியொரு பெண்ணுக்கு வரக்கூடாது. இந்தக் கொடிய வாய்ப்பு என்னுடனேயே முடியட்டும்’… நூலின் ஒவ்வொரு பக்கமும் நம்மை உருக்குகிறது என்றாலும் கடைசிப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிற நளினியின் இந்த வேண்டுகோள் இதயத்தை உலுக்கிவிடுகிறது. நூலைப் படித்து முடித்தபிறகு என் மீதே எனக்குக் கோபம் வந்தது. உலகிலேயே நீண்ட காலம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கு பாதையொன்று திறந்து விடப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஊறணி கிராமத்தின் கடற்கரைப்பகுதிக்கான பாதை திறந்து வைக்கும் நிகழ்வு நாளைமறுதினம் பொங்கல் தினத்திலன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார். தையிட்டி வடக்கு ஜெ.249 ஊறணி கிராமத்தின் ஆவளை சந்தியிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதை இராணுவத்தினால் சீரமைக்கப்பட்டு வருகின்றது. இராணுவத்தினால் அமைக்கப்பட்டு வருகின்ற பாதையினூடாக மட்டும்
ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையா பனிப் பொழிவின் காரணமாக 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்களும், வயோதிபர்களுமே அதிகளவில் உயிரிழந்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடு இல்லாதவர்களுக்கு பாடசாலைகளில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முகாம்களுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் போலாந்தில் ஏற்பட்ட கடுமையான பனிப் பொழிவு காரணமாக 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததாக அந்த
இத்தாலிய கடற்படையின் பேர்காமினி வகையைச் சேர்ந்த, ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துறைமுகம் வந்த இத்தாலிய போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். எதிர்வரும் 14ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் இந்தப் போர்க்கப்பல், இலங்கை கடற்படையுடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளது. பிந்திய தலைமுறை போர்த் தளபாடங்களும், இராணுவக் கருவிகளும் இந்தப் போர்க்கப்பலில் சிறப்பாக
வடமேல் மாகாணத்தில் கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் 115 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 102 பேருக்கும் எச்.ஐ.வி தொற்றியுள்ளமை தெரியவந்துள்ளதாக வடமேல் மாகாண தொற்று நோய்ப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு தொழில் வாய்ப்பினை பெற்றுச் சென்று மீண்டும் நாடு திரும்புபவர்களுக்கே எச்.ஐ.வி தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும், இதன் காரணமாக வடமேல் மாகாணம் எச்.ஐ.வி தொற்றில்
வறட்சி காரணமாக மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். மின்சார நெருக்கடிக்கு முகம்கொடுப்பதற்கு தனியார் துறையினரிடம் இருந்த 60 மெகா வோல்ட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளதாகவும்;, எக்காரணம் கொண்டும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 35 விதமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் அஜித் பி பெரேரா,