ஜிஎஸ்பி. வரிச்சலுகையைப் பெறுவதற்கு எந்த நிபந்தனையுமில்லை – அரசாங்கம்!

314 0

506976115Raviஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி. வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லையென சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,ஜிஎஸ்பி. வரிச்சலுகையை சிறீலங்கா இன்னும் ஒரு மாதத்துக்குள் பெற்றுக்கொள்ளும்.

இதன்காரணமாக சிறீலங்காவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 11 வீதம் வரிச்சலுகை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடனேயே சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகை வழங்கப்படுவதாக, ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.