நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிப்பது தொடர்பில் தேசிய அரசாங்கத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முழுமையாக ஒழிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்திவள பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

