கொழும்புத் துறைமுகதில் இத்தாலிய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்

236 0

ITS-Carabiniereஇத்தாலிய கடற்படையின் பேர்காமினி வகையைச் சேர்ந்த, ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துறைமுகம் வந்த இத்தாலிய போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

எதிர்வரும் 14ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் இந்தப் போர்க்கப்பல், இலங்கை கடற்படையுடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளது.

பிந்திய தலைமுறை போர்த் தளபாடங்களும், இராணுவக் கருவிகளும் இந்தப் போர்க்கப்பலில் சிறப்பாக பொருத்தப்பட்டுளமை தொடர்பாக கடற்படையினர் மத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடல்சார் பாதுகாப்பு, கண்காணிப்பு, ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கும் மற்றும் கடற்படை இராஜதந்திரம், ஆகியவற்றை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டும் இந்த போர்க்கப்பல் இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.