நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பிரதான நகரங்களில் தைப்பொங்கல் விழா (காணொளி)
நுவரெலியா மற்றும் தலவாக்கலையில் இத் தைப்பொங்கல் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. தலவாக்கலை நகரில் கொண்டாடப்பட்ட மத்திய மாகாணத்தின் தேசிய தைப்பொங்கல் விழா, மத்திய மாகாண விவசாயதுறை இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில் காலை 10 மணியளவில் தலவாக்கலை நகரில் கதிரேசன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்

