கிளிநொச்சி இரணைமடுவில் மழை வேண்டி குடைபிடித்து வழிபாடு (காணொளி)

466 0

mullai malaiகிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் மழைவேண்டி விவசாயிகளால் குடை பிடித்து விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நிலவரும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. இந்நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தைச் சேர்ந்த விவசாயிகள், விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை இரணைமடுக் குளத்திலிருந்து குடை பிடித்தவாறு கனகாம்பிகைக்குள அம்மன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

குறித்த வழிபாட்டு நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கமக்கார அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் சிவமோகன், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின்  97ஆவது ஆண்டு  நிறைவை  முன்னிட்டு இரணமடு கமக்கார  அமைப்புக்களின் சம்மேளனத்தினரும், விவசாயப் பெருமக்களும் இனணந்து கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் 97 பானைகளில் பொங்கி சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டனர்.