அரசாங்கம் கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு முன்வந்துள்ளது- நாகலிங்கம் வேதநாயகன் (காணொளி)

335 0

kaipaniகைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட கைப்பணி அபிவிருத்திச் சங்கத்தின் கைவினைக்கதிர் நூல் வெளியீட்டு விழாவும், கைப்பணியாளர்களுக்காண ஒன்று கூடல் நிகழ்வும் இன்று இடம்பெற்ற போது முதல்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்யும் கலையினை எதிர்கால சந்ததிகளும் அழிந்துவிடாது மேற்கொள்ள வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இதன் போது குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட கைப்பணி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் க.இரத்தினகோபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் உஷா சுபலிங்கம், வடக்கு மாகாண தேசிய அரங்கலைகள் பேரவையின் தலைவர் க.நவதர்சன், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஸ் மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://youtu.be/Y6_FeE6dBkw