மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா (காணொளி)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா இன்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.துரைரட்ணசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை

