சுவிஸர்லாந்து ஜனாதிபதியுடன் ரணில் சந்திப்பு

232 0

1305945657500சுவிஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதி டோரிஸ் லெதாட்டை (Doris Leuthard) அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இலங்கையுடனான இருதரப்பு உறவை தொடர்ந்தும் உறுதி செய்ய எதிர்காலத்தில் மிக நெருக்கமாக செயற்பட எதிர்பார்த்துள்ளதாக, சுவிஸர்லாந்து ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள தேசிய பொருளாதார மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில், இந்த சந்திப்பின் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, டோரிஸ் லெதாட்டிடம் விரிவாக விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, 2018ம் ஆண்டு ஐரோப்பிய மற்றும் ஆசிய வர்த்த அமைச்சர்களின் உயர்மட்ட மாநாட்டை நடத்த ரணில் விக்ரமசிங்க முன்வைத்து யோசனைக்கு உலக பொருளாதார மாநாட்டின் நிறைவேற்று தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.