கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்கு 6.5 கிலோ மீற்றர் நீளமான வீதி(காணொளி)

420 0

kili apiviruththi thiddangalகிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 178 மிலலியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட 6.5 கிலோ மீற்றர் வீதியை, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா மக்கள் பாவனைக்காக இன்று கையளித்தார்.

வடக்கிற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தப்பா, கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை மக்களிடம் கையளித்ததுடன், வேலைத்திட்டங்கள் சிலவற்றையும் பார்வையிட்டார்.

கிளிநொச்சி அக்கராயன் பகுதிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் இலங்கை அரசின் நிதியுதவியுடனும் 178மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட 6.5 கிலோ மீற்றர் நீளமான வீதியை மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளார்.

இந்நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் காதார் மஸ்தான், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன், வடமாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் மற்றும் மத்திய மாகாண அமைச்சுக்களின் செயலளர்கள், பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நல்லாட்சி அரசின் எண்ணக்கருவிற்கு அமைவாக நிலையான யுகத்தின் மூன்றாவது வருடத்தை ஆரம்பிப்போம் எனும் தொனிப்பொருளில் மேற்படி  நிகழ்வுகள் நடைபெற்றன.