கிளிநொச்சியில் பனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஊடாக 31 பேருக்கு வாழ்வாதாரக்கடன்கள் வழங்கிவைக்கப்பட்டன.
கிளிநொச்சியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஊடாக 31 பேருக்கு வாழ்வாதாரக்கடன்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
புனர்வாழ்வழிக்கப்பட்டு சமுக மயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வாழ்வாதார கடன்கள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் ஆகியோர் கலந்து கொண்டு கடன்களை வழங்கி வைத்தனர்.
பளைப்பிரதேசத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 31 பேருக்கு சுமார் 50.5 மில்லியன் ரூபா, வாழ்வாதாரக்கடனாக வழங்கப்பட்டது.

