அமெரிக்காவின் குரலுக்காக வழங்கிய காணியை மீளப் பெற இலங்கை முடிவு

234 0

560476032500அமெரிக்க தூதுவராலயத்தின் கீழுள்ள இரணவில காணியை மீளவும் பெற்றுக் கொள்ளும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் இரணவில பகுதியிலுள்ள 166.038 ஹெக்டேயர் காணி கடந்த 1991ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்க தூதுவராலயத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

“அமெரிக்காவின் குரல்” (Voice of America) வானொலி ஒலிபரப்பை இலங்கையில் நிறுவும் பொருட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், குறித்த குத்தகைக் காலம் நிறைவடைய முன்னர், அந்த நிறுவனம் மூடப்பட்டமையால் சம்பந்தப்பட்ட காணியையும் அதனை சூழவுள்ள அனைத்து சொத்துக்களையும் மீளவும் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதாக அமெரிக்க தூதுவராலயம் அறிவித்தது.

இதன்படி, குறித்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, அந்தக் காணியை பொறுப்பேற்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.