ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய நடவடிக்கை

Posted by - January 21, 2017

அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இரண்டு பிரதான கட்சிகளும் நேருக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகளுக்கான நடுநிலையாளராக ஜனவரி 8 ஆம் திகதி மாற்றத்திற்கு காரணமாக அமைந்த அமைச்சர் ஒருவர் செயற்பட்டு வருகிறார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு செவிகொடுக்கமல், அரசாங்கத்தின்

ஆளுநரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டால் நாட்டுக்கு ஆபத்தென எச்சரிக்கை!

Posted by - January 21, 2017

மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தை குறைத்து அந்த பதவியை பெயரளவிலான பதவியாக மாற்றினால், நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted by - January 21, 2017

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் தலையீடுகள் இல்லாத வெளிநாட்டு கொள்கைகளை தான் வரவேற்பதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப், ஒரு வெற்றிகரமான ஜனாதிபதியாக அவரது பணிகள் தொடர வேண்டும் என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த வாழ்த்து செய்தியை, அவரது உத்தியோப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். டொனால்ட் ட்ரம்பின் வெற்றி, தமது அரசியல் செயற்பாடுகளுக்கு சாதகமான தளத்தினை ஏற்படுத்தும்

புதிய எக்ஸ்பிரஸ் புகையிரத சேவைகள் வார இறுதியில் அறிமுகம்

Posted by - January 21, 2017

கொழும்பு கோட்டையிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்ல புதிய எக்ஸ்பிரஸ் புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட போக்குவரத்து சேவை வார இறுதியிலேயே அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க,வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.20 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புதிய எக்ஸ்பிரஸ் புகையிரதம் புறப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மேலும்,புகையிரதம் மாலை 7.03 மணியளவில் மாத்தளையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த புகையிரதம் மீண்டும் சனிக்கிழமை காலை 6.40 மணியளவில் மாத்தளையில்

வவுனியாவில் அரச பேருந்துகள் மோதி விபத்து

Posted by - January 21, 2017

வவுனியாவில் பழைய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கல்முனையிலிருந்து முல்லைத்தீவு செல்லவிருந்த பேருந்தும் பழைய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட பேருந்தும் ஒன்றை ஒன்று மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம்;(காணொளி)

Posted by - January 21, 2017

  மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பினால் யாழ்ப்பாண இந்தியத்துணைத் தூதரகத்தில், இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜனிடம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மகஜர் கையளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

பொதுநூலகத்திற்கு முன்னால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம்(காணொளி)

Posted by - January 21, 2017

யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு முன்னால் சிறிய தகரக்கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு ஒருசிலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவர் கைது

Posted by - January 21, 2017

  வவுனியா, ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவரை வனவளபாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, பெரியமடு பகுதியில் பெறுமதியான முதிரை மரங்களை வெட்டிய இருவர் ஓமந்தை பகுதி வனவளபாதுகாப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடமிருந்து 18 முதிரை மரக்குற்றிகள், மரம் வெட்டும் இயந்திரம், கோடரி என்பன கைப்பற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த இரு நபர்களையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இருவரையும் எதிர்வரும் 25ஆம்

விரைவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, கோத்தபாய ஆகியோரும் கைது செய்யப்படுவர்-மாதுரு ஒயே தம்மிஸ்ஸர தேரர்

Posted by - January 21, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர் என தேசிய சங்க சபையின் தலைவர் மாதுரு ஒயே தம்மிஸ்ஸர தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்: வரலாற்று காலத்திலிருந்து இலங்கை பெளத்தர்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்புக்கள் 2500 வருடங்களுக்கு பின்னரான இன்றும் குறைவில்லை. இதனை

பௌத்த பிக்குமார் அரசியலுக்கு வராமல் இருப்பது மிகவும் முக்கியமானது-பாலித ரங்கே பண்டார

Posted by - January 21, 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களை விட முன்னிலையில் இருக்க வேண்டிய கௌரவ பௌத்த பிக்குமார், அரசியலுக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் மாறுகிறார்கள் என்பதால், அப்படியான பிக்கு ஒருவர் எப்படி அரசியல்வாதிகளை விட முன்னிலையில் இருக்க முடியும் என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், உயரிய மட்டத்தில் இருக்க வேண்டிய பௌத்த பிக்குமார் அரசியலுக்கு வராமல் இருப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் கூறியுள்ளார். ஆனமடுவ நகரில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில்