அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்

265 0

download (2)அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் தலையீடுகள் இல்லாத வெளிநாட்டு கொள்கைகளை தான் வரவேற்பதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப், ஒரு வெற்றிகரமான ஜனாதிபதியாக அவரது பணிகள் தொடர வேண்டும் என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த வாழ்த்து செய்தியை, அவரது உத்தியோப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் வெற்றி, தமது அரசியல் செயற்பாடுகளுக்கு சாதகமான தளத்தினை ஏற்படுத்தும் என, மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.