ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவர் கைது

267 0

 

38 NEWS 21-01-2017 03வவுனியா, ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவரை வனவளபாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, பெரியமடு பகுதியில் பெறுமதியான முதிரை மரங்களை வெட்டிய இருவர் ஓமந்தை பகுதி வனவளபாதுகாப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடமிருந்து 18 முதிரை மரக்குற்றிகள், மரம் வெட்டும் இயந்திரம், கோடரி என்பன கைப்பற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த இரு நபர்களையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதிரை மரக்குற்றிகளுடன் கைதானவர்கள் 48 மற்றும் 27 வயதுடைய புளியங்குளம், பனிக்கநீராவி மற்றும் ஓமந்தை, பெரியமடு பகுதியைச் சேர்ந்தவர்களாவர், கைதானவர்களில் 27 வயதுடையவர் மீது மரக்கடத்தல் தொடர்பில் கனராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஓமந்தை, பெரியமடு பகுதி விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஐ.பி ரஞ்சன தலைமையிலான குழுவினரும் மற்றும் ஓமந்தை பகுதி வனவளபாதுகாப்பு பிரிவியைச் சேர்ந்த குழுவினரும் இணைந்து மரம் வெட்டிய இருவரையும் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.