கடலில் மூழ்கி இளைஞர்கள் மூவர் பலி

Posted by - January 24, 2017

திருகோணமலை, மூதூர், ஹபீப் நகர் கடலில் நீராடச்சென்ற இளைஞர்கள் மூவர், நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். திஹாரிய கலகெடிஹேன, அலி ஜின்னா மாவத்தையைச் சேர்ந்த எம்.உகாஸ் (19 வயது) எஸ்.இக்ராம் (19 வயது) மற்றும் எம்.அப்துல்லாஹ் (16 வயது) ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர். மூதூர் பிரதேசத்துக்கு ஜமாஅத் போதனைக்காக வந்திருந்த நிலையிலே​யே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 24, 2017

கிழக்கு பல்கலைகழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி, பல்கலைக்கழத்தின் பிரதான வயிலுக்கு முன்னால் நேற்று ஒன்றுகூடிய மாணவர்கள்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் விடுதி உரிமைப் போராட்டம் காரணமாகப் பல்கலைகழகத்தில் விரிவுரைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளனன. முன்னதாக கடந்த சனிக்கிழமை, மாணவர்கள் அனைவரையும் பல்கலைகழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் வெளியேற விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு, சனிக்கிழமை காலை 8.00 மணியுடன் முடிவடைந்த போதிலும் தொடர்ந்தும் மாணவர்கள் நிர்வாகக் கட்டடத்தில் தங்கியுள்ளனர். விடுதி

சொகுசு காரில் கஞ்சா- மூவர் கைது

Posted by - January 24, 2017

தலைமன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்புக்கு, அதி சொகுசு கார் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சாப் பொதிகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் வைத்து காரை மறித்து காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர். அதன்போது, காரில் மறைத்து வைத்திருந்த 35 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி 35

விபத்தில் இருவர் பலி – 35 பேர் காயம்

Posted by - January 24, 2017

கொழும்பு- கண்டி பிரதான வீதியின், நிட்டம்புவ, பட்டலிய பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளதோடு 35 பேர் படுகாயடைந்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். பஸ்ஸொன்றும் கன்டர் ரக லொறியொன்றும் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த பஸ்ஸில் பயணித்த இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள், வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதன்போது, முச்சக்கரவண்டியொன்றும் சேதமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

படித்த வாலிபர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - January 23, 2017

இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய உழவர்களைப் பாராட்டுவதற்கும், உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளை வணங்கித் தட்டிக் கொடுப்பதற்கும் ஏற்ற ஒரு தமிழர் திருநாளாக தைப்பொங்கல் இருந்து வருகின்றது என வடமகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையா?

Posted by - January 23, 2017

‘அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம்’ என்கின்ற சர்ச்சைக்குரிய சொற்றொடரானது இன்று சிறிலங்காவின் இடைக்கால நீதி தொடர்பில் விவாதிக்கப்படும் பேசுபொருளாக மாறியுள்ளது.

காணாமல் போன உறவுகளின் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்!

Posted by - January 23, 2017

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பத்தினர் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்(காணொளி)

Posted by - January 22, 2017

யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. உவர்நீரை நன்நீராக்கும் திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தலா 15 இலட்சம் ரூபா செலவில் இயந்திரத் தொகுதிகள் அமைக்கப்பட்டு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டு, இலங்கை கடற்படைத்தளபதி வைஸ்அட்மிரல் ரவீந்திர விஜயவர்த்தன, வடக்கு மாகாண கடற்படைத்தளபதி பியல் டி சில்வா, மற்றும் பௌத்த மதகுரு ஆகியோர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் திறந்து வைத்தனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இதுவரை

மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க உள்ளார்- ராஜித சேனாரத்ன

Posted by - January 22, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சில முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி எடுக்க உள்ள இந்த அரசியல் முடிவுகள் மக்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அடுத்த சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து போட்டியிட்டால் , ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதோ கெதிதான் -இசுர தேவப்பிரிய

Posted by - January 22, 2017

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதோ கெதிதான் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மாகாண  முதலமைச்சர்கள் இன்று   நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற  இக்கலந்துரையாடலில் ஆறு முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். இப்பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது,