எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்(காணொளி)

390 0

யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

உவர்நீரை நன்நீராக்கும் திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தலா 15 இலட்சம் ரூபா செலவில் இயந்திரத் தொகுதிகள் அமைக்கப்பட்டு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டு, இலங்கை கடற்படைத்தளபதி வைஸ்அட்மிரல் ரவீந்திர விஜயவர்த்தன, வடக்கு மாகாண கடற்படைத்தளபதி பியல் டி சில்வா, மற்றும் பௌத்த மதகுரு ஆகியோர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் திறந்து வைத்தனர்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இதுவரை நாடுபூராகவும், 107 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
கடற்படையினரால் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், போதனா வைத்தியசாலை, பொலிஸ் நிலையம் ஆகியவற்றுடன் இன்றையதினம் நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

மீள்குடியேற்ற அமைச்சினால் எழுவைதீவில் 7.3 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் இறங்குதுறை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எழுவைதீவு இறங்குதுறையை கடற்படையினர் அமைக்கப்பட்ட இறங்குதுறையில் தொழிலாளர் கூலியை மீதப்படுத்தி கடற்படையினர் தமது நிதியையும் பயன்படுத்தி குறித்த உவர்நீரை நன்நீராக்கும் திட்டம் எழுவைதீவிலும், நயினாதீவிலும் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் வேலனை பிரதேச செயலாளர் சுகுணவதி தெய்வேந்திரன், கடற்படை அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.