ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதோ கெதிதான் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மாகாண முதலமைச்சர்கள் இன்று நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஆறு முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இப்பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது,
பேச்சுவார்த்தை நடாத்தினோம். மகிழ்ச்சியாக இருந்தது. வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இரு குழுக்களிடையேயும் அரசியல் ரீதியிலான போராட்டம் உருவாகியிருந்ததை கண்டோம். நாம் சிறந்ததொரு ஆரம்பத்தை எடுத்தோம். அவர்களது தரப்பில் பொறுப்பு மிக்கதான பதிலொன்றை நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

