கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 10 மாணவர்களும் விடுதலை

Posted by - January 24, 2017

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 10 மாணவர்களும் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்ட போது தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாட்டுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கருணாகரனினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த நான்கு தினங்களாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி கோரி இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகப் பேரவைக்

ஹட்டனில் வாகன விபத்து பெண் ஒருவர் பலி

Posted by - January 24, 2017

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் ஒன்றில் குறித்த பெண் மோதுண்டதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இடத்தில் விபத்துக்குள்ளான பெண் வீதியின் ஓரத்தில் பயணித்த வேளையில் வழியில் சென்ற வான் குறித்த பெண்ணின் மீது மோதுண்டு விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலத்த காயங்களுடன்

எதிர்க்கட்சி வரிசையில் பிரியங்கர ஜயரட்ன

Posted by - January 24, 2017

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்த பிரியங்கர ஜயரட்ன அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். முன்னாள் அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பிரியங்கர ஜயரட்னவை பாராளுமன்றத்திற்குள் அழைத்து வந்தனர்.

ராஜபக்ஷவை சந்தித்த, முதலமைச்சர்களுடன் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொலைபேசியினூடாக கலந்துரையாடியுள்ளார்

Posted by - January 24, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முதலமைச்சர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொலைபேசியினூடாக கலந்துரையாடியுள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,தொலைபேசியினூடாகவே முதலமைச்சர்களுடன் கலந்துரையாடினார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ மற்றும் சுதந்திரக் கட்சியின் ஏழு முதலமைச்சர்கள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நேற்றைய தினம், சந்திரிக்காவுடன் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ராஜபக்ச ஆதரவை வழங்க வேண்டும் என மஹிந்தவுடனான சந்திப்பின் போது முதலமைச்சர்கள்

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்

Posted by - January 24, 2017

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் (Consular Office) ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அலுவலகம் யாழ்மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 26ம் திகதி காலை 10.00 மணிக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. யாழ் மாவட்ட பொதுமக்கள் தூதரக சேவைகளை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்

நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருகிறது-சம்பந்தன்

Posted by - January 24, 2017

ஒவ்வொரு அரசாங்கமும் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை மத்திய வங்கி அறிக்கை தொடர்பிலான விவாதம் இன்று பாராளுமன்றில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊழலை ஒழிக்கத் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தில் உள்ள சில உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. அரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டினால்

அழுத்கமவில் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டார் கோட்டாபய – அஸ்வர்

Posted by - January 24, 2017

அழுத்கமவில் தவறு நடந்ததை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் தற்பொழுது வீடுகள் கட்டிக்கொடுக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களே இந்த அரசாங்கத்தில் இடம்பெறுவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார். அழுத்கம சம்பவம் தற்போதுள்ள அரசாங்கத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட

யாழ் ஊர்காவற்துறையில் பயங்கரம்!! 7 மாத கர்ப்பிணிப் பெண் கொள்ளையார்களால் கோடரியால் வெட்டிக் கொலை

Posted by - January 24, 2017

ஊர்காவற்துறையில் இன்று மதியம் தனித்திருந்த கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டுக்குள் களவெடுக்கச் சென்ற  ரவுடிகள் அப் பெண்ணை  கோடரியால் கொத்தியும் கோடரிப் பிடியால் மண்டையை உடைத்தும் கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொள்ளையர்களார் அடித்து, வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்தபோது கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட முயன்றவேளை, கொள்ளையர்களுக்கும் பெண்ணுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதலில்

புலிகளும் எம்.ஜி.ஆரும் வேறு வேறல்ல! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 24, 2017

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுப்பதைப் போல – என்பது தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவந்த உவமை. இப்போதோ எப்போதாவதுதான் அதைக் கேட்கமுடிகிறது. அதனால்தானோ என்னவோ அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார் நண்பர் அப்புசாமி. கூரையைப் பிய்த்துக் கொண்டு – என்று ஆரம்பித்தாலே வார்தா தான் ஞாபகம் வருகிறதாம் அப்புசாமிக்கு! இன்னொரு நண்பர் குப்புசாமிக்கு இதைக்காட்டிலும் அதிக ஞாபக சக்தி. கூரை ரூ பிய்த்துக்கொண்டு ரூ என்கிற வார்த்தைகளைக் கேட்டாலே சேலத்திலிருந்து சென்னைக்குப் பணப்பெட்டிகளுடன் வந்த

யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் வூப்பெற்றால் நகர்களில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவெளிச்சி நிகழ்வு

Posted by - January 24, 2017

வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் வூப்பெற்றால் ஆகிய நகரங்களில் எழுச்சியுடன் நடைபெற்றது. இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.