யாழ் ஊர்காவற்துறையில் பயங்கரம்!! 7 மாத கர்ப்பிணிப் பெண் கொள்ளையார்களால் கோடரியால் வெட்டிக் கொலை

99 0

ஊர்காவற்துறையில் இன்று மதியம் தனித்திருந்த கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டுக்குள் களவெடுக்கச் சென்ற  ரவுடிகள் அப் பெண்ணை  கோடரியால் கொத்தியும் கோடரிப் பிடியால் மண்டையை உடைத்தும் கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொள்ளையர்களார் அடித்து, வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்தபோது கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட முயன்றவேளை, கொள்ளையர்களுக்கும் பெண்ணுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதலில் பெண் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அங்கிருந்து கொள்ளையர்கள் தமது அடையாளம் எதுவும் பொலிஸாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக இரத்தக் கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பெண்ணின் தாலிக்கொடியையும் அபகரித்து தப்பிச்சென்றுள்ளனர்

இச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலைதோன்றியுள்ளதாகவும் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.

ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்திற்கு முன்னாள் பொதுமக்கள் திரண்டுள்ளதால் தற்போதும் அங்கு பதற்றநிலை நிலவிவருகின்றது.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முயன்றபோதே பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

எனினும் குறித்த் சந்தேக நபர்களை பொலிஸார் யாழ்ப்பாணத்திறகு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, வெளியிடத்தில் இருந்து இரும்பு வியாபாரத்திற்காக அங்கு வந்த முஸ்லீம் நபர்களே இவ்வாறு குற்றம்புரிந்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.