யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் வூப்பெற்றால் நகர்களில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவெளிச்சி நிகழ்வு

137 0

வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் மற்றும் வூப்பெற்றால் ஆகிய நகரங்களில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.