எதிர்க்கட்சி வரிசையில் பிரியங்கர ஜயரட்ன

258 0

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்த பிரியங்கர ஜயரட்ன அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

முன்னாள் அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பிரியங்கர ஜயரட்னவை பாராளுமன்றத்திற்குள் அழைத்து வந்தனர்.