தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted by - January 25, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல் தொடர்பாக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையாளர் ஆகியோர் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அத்துமீறல் குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது. ஊடக பதிவுகளின் படி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை நிகழ்த்திய அத்துமீறல் அப்பட்டமான மனித உரிமை மீறல் என தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அத்துமீறல் குறித்து

போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து மெரினா கடற்கரை அருகே விடிய விடிய தூங்காமல் மக்கள் தவிப்பு

Posted by - January 25, 2017

போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம், சர்மாநகர், ரோட்டரி நகர் உள்ளிட்ட இடங்களில் பெண்கள், குழந்தைகளுடன் 2வது நாளாக விடிய விடிய தூங்காமல் வீடுகளுக்கு வெளியே அமர்ந்து இருந்தனர்.

யாழில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்

Posted by - January 25, 2017

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் [Consular Office] ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அலுவலகம் யாழ்மாவட்ட செயலகத்தில் நாளை காலை 10.00 மணிக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்துவைக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மனித வள பணியாளர்கள் 37 பேர் கைது

Posted by - January 25, 2017

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித வள பணியாளர்கள் 37 பேரை நீதிமன்றம் உத்தரவுப்படி கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சிற்கு முன்னால் இவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தவை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முறி மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்

Posted by - January 25, 2017

வாத விவாதங்கள் மற்றும் ஆணைக்குழுக்களை நியமிப்பதை விடுத்து மத்திய வங்கி முறி மோசடியாளர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல் பீரிஸ் விடுத்துள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு எதிராக இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஶ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு மதுரையில் ஏற்பட்ட பரிதாபநிலை

Posted by - January 25, 2017

ஶ்ரீ லங்கன் எயால்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் சிலர் முட்கம்பிகளில் சிக்கிக்கொண்ட சம்பவமொன்று தமிழகம் – மதுரையில் பதிவாகியுள்ளது. மதுரையில் இருந்து கொழும்பு நோக்கி செல்ல தயாராக இருந்து விமானத்தை நோக்கி அதன் செயற்பாட்டு குழுவினர் சென்றுள்ளனர். இதன் போது விமான நிலையத்தை ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் , தடுப்புக்காக போடப்பட்டிருந்த முட்கம்பி வேலிக்கு கீழாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. போராட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு அருகில் வீதி மூடப்பட்டமையே இந்த நிலைமைக்கு

முக்கிய சட்டத்தில் கை வைக்கும் ட்ரம்ப்

Posted by - January 25, 2017

முன்னைய அரசாங்கத்தின் பல ஒப்பந்தங்களை ரத்து செய்துவரும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்றுமுக்கியமான சட்ட மூலம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க குடிவரவு குடியகழ்வு சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதாமான திருத்தங்களில் அவர் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது தேர்தல்கால பிரசாரங்களின் போது குடிவரவு குடியகழ்வு சட்டங்கள் தொடர்பான டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன்படி இன்றைய நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதன்போது குறிப்பாக அகதிகளுக்கும், ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான்,

கிழக்கு பல்கலைக்கழகத்தின் விடுதி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Posted by - January 25, 2017

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள விடுதிப்  பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு காணப்படும் என்று, உயர்க் கல்வியமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். முன்னதாக கேள்வியெழுப்பிய நளிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விப் பயிலும் 1,800 மாணவர்கள், விடுதி வசதிகள் இன்றி அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு விடுதி வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படுமா? என்று வினவினார். அதற்குப் பதிலளித்த உயர்க் கல்வியமைச்சர், “பல்கலைக்கழக

பிக்குவாக மாறிய முஸ்லிம் சிறுவன்

Posted by - January 25, 2017

ஆச்சிரமமொன்றில் இணைக்கப்பட்ட 7 வயதுடைய முஸ்லிம் சிறுவனொருவன், பௌத்த பிக்குவாக மாறிய சம்பவமொன்று, திம்புலாகல வன ஆச்சிரமத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து திம்புலாகல வன ஆச்சிரமத்தின் தலைமைத் தேரர் மிலானே சிறியலங்காரர் கூறியதாவது, “குறித்த சிறுவனின் தாய், வெளிநாடொன்றில் பணிபெண்ணாக தொழில் புரிந்துவரும் நிலையில், சிறுவனின் தந்தையான ஹமீட் ஸ்மைல், தனது மகனை இந்த ஆச்சிரமத்தில் கொண்டு வந்துச் சேர்த்தார். இந்நிலையில், குறித்த மாணவன், பௌத்த மதத்தைத் தழுவி, தற்போது இரத்தினபுரி சிறி சுதர்சனலங்கார என்ற பெயரில்

மைத்திரி, ரணில் ஊழல்வாதிகள் இல்லை – சம்பந்தன்

Posted by - January 25, 2017

ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியையும், சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியையும் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றன. எனினும், மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும், ஊழல்வாதிகள் இல்லை என்று, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஊழல் பற்றி நீங்கள் பேசி வருகிறீர்கள். அவ்வாறு பேசிப்பேசியே மக்களை நீங்கள் முட்டாளாக்குகின்றீர்களா. ஊழல் பற்றிப் பேசுகின்றீர்கள், அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது நபர் யார், ஒரு நபர் இருக்கிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.