வாத விவாதங்கள் மற்றும் ஆணைக்குழுக்களை நியமிப்பதை விடுத்து மத்திய வங்கி முறி மோசடியாளர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கையை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல் பீரிஸ் விடுத்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு எதிராக இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

