முக்கிய சட்டத்தில் கை வைக்கும் ட்ரம்ப்

256 0
முன்னைய அரசாங்கத்தின் பல ஒப்பந்தங்களை ரத்து செய்துவரும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்றுமுக்கியமான சட்ட மூலம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க குடிவரவு குடியகழ்வு சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதாமான திருத்தங்களில் அவர் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது தேர்தல்கால பிரசாரங்களின் போது குடிவரவு குடியகழ்வு சட்டங்கள் தொடர்பான டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன.

இதன்படி இன்றைய நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இதன்போது குறிப்பாக அகதிகளுக்கும், ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும், அமெரிக்காவுக்கு பிரவேசிக்க முடியாத படிக்கு திருத்தம் ஏற்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளுக்கான வீசா வழங்கல் கட்டுப்படுத்தப்படும் என்றும், சிரியா அகதிகள் ஏற்பு வேலைத்திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இரண்டு நாடுகுளின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டது.

அத்துடன் மோடியை அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.