யுத்தம் முடிவடைந்தாலும் தமிழர் தாயகத்தில் யுத்தகால சூழல் தொடர்கிறது! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!
இலங்கை அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்தம் முடிவடைந்தாலும் யுத்தகால சூழல் இன்றும் தொடர்வதாக வட மாகாண மகளிர் விவகாரம் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள், வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றை நேற்று புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைத்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். மன்னார் பிரதான பாலத்தடி பெரியகடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகையில்

