மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் பெப்ரவரியில் ஆரம்பம்

Posted by - January 30, 2017

மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளின், குருணாகல் பகுதிக்கான நிர்மாணப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.சி.திசாநாயக்க தெரிவித்தார். உள்ளுர் ஒப்பந்தக்காரர்கள் மூலம் இந்த நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - January 30, 2017

கடந்த காலங்களில் காணால் போனவர்களைக் கண்டறிய அரசு விசேட திட்டமொன்றை வகுக்க வேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது; யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் – காணாமல்போயுள்ளனர். இவர்கள் தொடர்பில் நேர்மையான விசாரணைகளோ – தீர்மானங்களோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. அந்தக் குடும்பங்கள் தமது உறவுகள் இன்று

சுமந்திரன் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட போராளிகள் நான்கு பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில்

Posted by - January 30, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகள் நான்கு பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக வடக்கில் பல பகுதிகளில், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரின் விசாரணையின் கீழ் 3 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 14 ஆம் திகதி 16 ஆம் திகதி அன்றும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 32 மற்றும் 37 வயதுடைய

அரசியல் தொடர்பில் சிறப்பு படிப்பிற்காக சீனா செல்லும் கோத்தபாய

Posted by - January 30, 2017

அரசியல் தொடர்பில் சிறப்பு படிப்பிற்காக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சீன பல்கலைகழகத்திற்கு நுழைய தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மூன்று வருட பட்டப்படிப்பிற்காக சீன அரசாங்கத்தினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இணைப்பு நடவடிக்கைகளை முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் பாத் பைன்டர் என்ற அரச சார்பற்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல் வட்டாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கையில் அரசியல் முகாமைத்துவம் மேற்கொள்ளும் நிறுவனமான பாத் பைன்டர், சீனாவின் CICIR (China Institutes

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாலூட்டி வளர்த்த கடும்போக்காளர்களே சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்-நிசாந்த சிறி வர்னசிங்க

Posted by - January 30, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சிக்கான பொறுப்பினை அவர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாலூட்டி வளர்த்த கடும்போக்காளர்களே சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர் கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

புலனாய்வு பிரிவினர் வடக்கில்………

Posted by - January 30, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தமது நடவடிக்கைகளை வடக்கில் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் விடுதலைப்புலிகள் என்ற கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டவர்கள் மீது கண்காணிப்பை புலனாய்வு பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். தி ஹிந்து செய்தித்தாளின் தகவல்படி சுமந்திரனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக பிரதமர் காரியாலயம் செய்தி

தேசிய ஐக்கியம் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை-மனோ

Posted by - January 30, 2017

பெரும்பான்மை இனத்திற்கும், பெரும்பான்மை மதத்துக்கும், பெரும்பான்மை மொழிக்கும் அடிமைப்பட்டு சேவகம் செய்வதுதான் தேசிய ஐக்கியம் என்று சிலர் நினைக்கின்றனர்.ஆனால் தேசிய ஐக்கியம் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார். தேசிய சகவாழ்வுக்கான இளைஞர் தலைமைத்துவ மாநாடு இன்று சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது பிரஜாவுரிமையை ரத்த செய்ய முயற்சி-பந்துல குணவர்தன

Posted by - January 30, 2017

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது பிரஜாவுரிமையை ரத்த செய்ய முயற்சிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புஞ்சிபொரளை ஸ்ரீ வஜிராஸ்ரம விஹாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… ஊடக சந்திப்புக்களை நடத்தியதாக குற்றம் சுமத்தி கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து, அவர்களின் பிரஜாவுரிமையை ரத்து செய்யும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மௌனிக்கச் செய்ய அரசாங்கம் கடும் பிரயத்தனம்

இந்தியாவுக்கு திரில் வெற்றி

Posted by - January 30, 2017

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 20க்கு 20, 2வது சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாக்பூரில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை

சாய்ந்தமருதில் விபத்து – மூன்று பேர் பலி – 10 பேர் காயம்

Posted by - January 30, 2017

அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் மேலும் பத்து பேர் காயமடைந்து கல்துமுனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மூவரும் பாலமுனையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இன்று அதிகாலையில் தம்புள்ளை ஹபரண பிரதேசத்தில் பேருந்தொந்து ஒன்று குடைசாய்ந்ததில் 15 பேர் காயமடைந்தனர். பொலனறுவையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் ஹபரண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.