இந்தியாவுக்கு திரில் வெற்றி

240 0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 20க்கு 20, 2வது சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாக்பூரில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இதற்கமைய 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொறு ஒருப்போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.