சீரற்ற காலநிலை – 19 மாவட்டங்கள் பாதிப்பு

Posted by - January 30, 2017

சீரற்ற காலநிலை காரணமாக 19 மாவட்டங்களை சேர்ந்த ஆறு லட்சத்து 76 ஆயிரத்து 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் வெள்ளப் பெருக்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியானமை குறிப்பிடத்தக்கது.   // = 0) { for (var x = 0; x < nodelist.length; x++) { if (x == nindex) { nodelist[x].getElementsByClassName("panel-body").item(0).classList.remove("panel-hide"); nodelist[x].getElementsByClassName("panel-body").item(0).classList.add("panel-show"); } else

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2017!

Posted by - January 30, 2017

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும், தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த சுவிஸ் வாழ் தமிழீழ உறவுகளுடனும், சுவிஸ் தமிழ் வர்த்தக நிறுவனங்களின் பேராதரவிலும்; மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், நிகழ்வுச்சுடர், பொதுச்சுடரினைத் தொடர்ந்து: தன்னினத்தின் துயர் நீக்க தீயில் கருவான வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளான அன்றைய தினம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள் சுமந்து

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வருக்கு எதிராக வழக்கு

Posted by - January 30, 2017

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வர்களில் ஒருவர் அனுமதியின்றி அரச சொத்துக்களை உடைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ளது. கண்டி கலஹா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அதனை குத்தகைக்கு எடுத்தவர் மீண்டும் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைத்த பின்னர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வர் குத்தகைக்கு எடுத்துள்ளார். பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் கட்டடத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை காணாமல் போக செய்ததாக அமைச்சரின்

பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை-ராஜித சேனாரத்ன

Posted by - January 30, 2017

பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாகாண சுகாதார அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் நாடு பூராகவும் உள்ள 20 தோட்டப்புற வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக சுகாதார அமைச்சு கடந்த 2016 ஆம் ஆண்டில் 41 கோடி ரூபாவை ஒதுக்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் முன்னெற்றம்அடைவதற்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவை-சுஜீவ சேனசிங்க

Posted by - January 30, 2017

நாடு பொருளாதார ரீதியில் முன்னெற்றம்அடைவதற்கும், அபிவிருத்தியடைவதற்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க,மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டை இரண்டு வருடங்களில் அபிவிருத்தி செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சில நாடுகள் அபிவிருத்திக்காக 20 வருடங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் இலங்கையின் அபிவிருத்திக்கு இன்னும் மூன்று வருடங்கள் போதும் என சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார். அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில்

பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும்நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் -ரணில்

Posted by - January 30, 2017

பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைய செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்து பணிகளை ஆரம்பித்துள்ளோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார். இதனிடையே பிரதமர் ரணில், இன்று முற்பகல் அனுராதபுரம் -இசுருமுனி

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் வைத்திய விடுதி திறந்து வைக்கப்பட்டது

Posted by - January 30, 2017

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று  உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார். சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு அமைச்சரின் மாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் 9 மில்லியன் ரூபாய் செலவில் இவ் வைத்தியசாலை விடுதி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைத்தியசாலை திண்மக்கழிவுகளை சேகரிக்கும் கழிவு தொட்டி உள்ளடங்கிய கட்டிடத்தொகுதி ஒன்றும் 1.2 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இதன் போது

வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம்

Posted by - January 30, 2017

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நினைவு தினம் இன்று காலை மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இந்த நினைவு தின நிகழ்வு வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் ஏ.தேவதாஸின் தலைமையிலும், வடமாகாணசபை உறுப்பினரான சி.தவராசாவின் அனுசரனையிலும் நடைப்பெற்றது. இந்த நிகழ்வின் போது வட்டக்கண்டல் கிராமத்தில் கடந்த 30.01.1985 ஆம் ஆண்டு படுகொலை

சிறிய தொழிற்சாலைகளுக்கு ஊக்குவிப்புக் கடன் வழங்குவதற்கு கைத்தொழில்துறை பிரிவு நடவடிக்கை

Posted by - January 30, 2017

களுத்துறை மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 100 சிறிய தொழிற்சாலைகளுக்கான ஊக்குவிப்புக் கடனை வழங்குவதற்கு சிறிய கைத்தொழில்துறை பிரிவு முன்வந்துள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு 47 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனூடாக கடற்றொழில், வர்த்தகம் மற்றும் ஆடைத்தொழிற்துறை ஆகிய துறைகள் சார்ந்த தொழிற்சாலைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 400 குடும்பங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் வைத்தியசாலையில்…………

Posted by - January 30, 2017

பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமிலிருந்து தங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேர் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகள் இருவரில் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கவேலு நிமலன் என்ற தமிழ் அரசியல் கைதியே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.