களுத்துறை மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 100 சிறிய தொழிற்சாலைகளுக்கான ஊக்குவிப்புக் கடனை வழங்குவதற்கு சிறிய கைத்தொழில்துறை பிரிவு முன்வந்துள்ளது.
இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு 47 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனூடாக கடற்றொழில், வர்த்தகம் மற்றும் ஆடைத்தொழிற்துறை ஆகிய துறைகள் சார்ந்த தொழிற்சாலைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 400 குடும்பங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

