பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும்நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் -ரணில்

352 0

பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைய செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்து பணிகளை ஆரம்பித்துள்ளோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதனிடையே பிரதமர் ரணில், இன்று முற்பகல் அனுராதபுரம் -இசுருமுனி ராஜமஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பிரதமர், மல்வத்துஓய நீர்தேக்க திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்ட விவசாயிகள் இரண்டு போகங்களுக்கு பயிர் செய்கையை மேற்கொள்ள முடியும் என்றார்.