சுதந்திர தின நிகழ்வு ஒத்திகை – பெரசூட் வீரர்கள் கடலில் வீழ்ந்துள்ளனர்

Posted by - February 3, 2017

சுதந்திர தின நிகழ்வு ஒத்திகையின் போது 5 பெரசூட் வீரர்கள் கடலில் வீழ்ந்துள்ளனர். எவ்வாறாயினும் அவர்களை கடற் படையினர் பாதுகாத்துள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் 69 வது சுதந்திர தின நிகழ்வு காலி முகத்திடலில் நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு எதிராக 58 லட்சம் கையெழுத்துக்கள்

Posted by - February 3, 2017

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நாட்டின் காணிகளை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக 58 லட்சம் கையெழுத்துக்கள் சேகரிக்கப்படவுள்ளன. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இதனை தெரிவித்துள்ளார். சீனா இலங்கையில் உள்ள காணிகளை கோரவில்லை என தெரிவித்துள்ளது.அரசாங்கமே அதனை பெற்று கொள்ளுமாறு நிர்ப்பந்தித்தது. எனவே அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை தெளிவுப்படுத்தவுள்ளோம். இதனையடுத்து அரசாங்கத்திற்கு எதிரான கையெழுத்துக்களை சேகரிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இலங்கை அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

Posted by - February 3, 2017

எதிர்காலத்தில் அமைச்சரவை சீர்த்திருத்தம் ஒன்று ஏற்படலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தீர்மானிக்கின்ற நேரத்தில் அமைச்சரவை சீர்த்திருத்தம் ஒன்று ஏற்படுத்தப்படும். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடாகும். இது தொடர்பான இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடி எடுப்பார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர

சரத் குமார குணரத்னவின் மருமகனுக்கு பிணை

Posted by - February 3, 2017

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு வழங்கிய ரூபாய் 112 லட்சம் நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவின் மருமகனான உபுல் சமிந்த குமாரசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பிணை மற்றும் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று உத்தரவிட்டுள்ளார். இதனுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் குற்றபுலனாய்வு

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகள்

Posted by - February 3, 2017

69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவற்துறை தலைமையம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியினுள், காலி வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டம், பழைய நாடாளுமன்ற சுற்றுவட்டம் வரையான பாதை மற்றும் சைத்ய வீதி என்பன மூடப்பட்டிருக்கும் என காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. காலை 7 மணி

அரிசி விலை 66 ரூபாவரை குறைக்கப்பட்டுள்ளது

Posted by - February 3, 2017

மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன? மைத்திரி – ரணில் சபையில் அறிவிக்க வேண்டும்

Posted by - February 3, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொலை முயற்சி தொடர்பில் யார் யார்? கைது செய்யப்பட்டார்கள், என்ன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று முதல் அமுல்

Posted by - February 3, 2017

அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று(3) முதல் அமுல்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ள கேப்பாப்பிலவு மக்கள்

Posted by - February 3, 2017

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் நாளை (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு காணாமல்போனவர்கள் குறித்து பொறுப்புகூற வேண்டிய கடப்பாடு

Posted by - February 3, 2017

காணாமல்போனவர்கள் குறித்து பொறுப்புகூற வேண்டிய கடப்பாடு, தற்போதைய அரசாங்கத்துக்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.