சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகள்

272 0

69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவற்துறை தலைமையம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியினுள், காலி வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டம், பழைய நாடாளுமன்ற சுற்றுவட்டம் வரையான பாதை மற்றும் சைத்ய வீதி என்பன மூடப்பட்டிருக்கும் என காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டத்தில் காலி முகத்திடலுக்கு உட்பிரவேசிக்கும் மருங்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.