எதிர்காலத்தில் அமைச்சரவை சீர்த்திருத்தம் ஒன்று ஏற்படலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தீர்மானிக்கின்ற நேரத்தில் அமைச்சரவை சீர்த்திருத்தம் ஒன்று ஏற்படுத்தப்படும்.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடாகும்.
இது தொடர்பான இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடி எடுப்பார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.