சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன? மைத்திரி – ரணில் சபையில் அறிவிக்க வேண்டும்

243 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொலை முயற்சி தொடர்பில் யார் யார்? கைது செய்யப்பட்டார்கள், என்ன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுமந்திரனின் கொலை முயற்சி குறித்த உண்மை நிலைமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சரோ, யாரரேனும் நாடாளுமன்றில் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், 12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகியுள்ள போதிலும், வாழ வழித்தெறியாது தவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு தவிப்பவர்களை இதுபோன்று தொடர்ந்தும் துரத்தினால், இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் மீண்டும் ஒரு போராட்டம் ஏற்படலாம் என்றும் எச்சரித்தார்.