முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா
தமிழகத்தின் முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். போயஸ் கார்டனில் நடந்த கூட்டத்தில் ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் அவர் வழங்கியுள்ளார். அ.தி.மு.க., சட்ட சபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சசிகலா முதல்வராகிறார். இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் கூறியதாவது: அதிமுக பொது செயலர் சசிகலாவை தமிழகத்தின் முதல்வராக முன்மொழிகிறேன். அனைவரும் வழிமொழிய வேண்டும் என கோருகிறேன் என்றார்.

