அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் முக்கிய அமைச்சர்கள் சிலர் தனியாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
ஸ்ரீ ல.சு.கட்சியிலிருந்து மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் எஸ்.பீ. திஸாநாயக்க ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
ஐ.தே.க. விலிருந்து கபீர் ஹாஷிம், மலிக் சமரவிக்ரம உட்பட ஒரு குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஐ.தே.க. யின் அமைச்சர்கள் குறித்து இதன்போது ஆராய்ந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீ ல.சு.க. அமைச்சர்கள் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
இதன்போது கூட்டு எதிர்க் கட்சியின் டொப் 10 அமைச்சர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

