2020ஆம் ஆண்டில் நாட்டின் தலைமைத்துவத்தை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சூரியவெவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் அரச தலைமைத்துவத்தையும் ஹம்பாந்தோட்டைக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர் வீ.எஸ். ராமலிங்கம் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
எதிர்வரும் 2020ம் ஆண்டில் இலங்கையில் இளைய அரசியல்வாதி ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என அவர் எதிர்வு கூறியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜோதிடர் ராமலிங்கத்தை சந்திக்கச் சென்ற அரசியல்வாதிகள் பலரில் சஜித் பிரேமதாசவும் ஒருவராக காணப்படுகின்றார்.
இதேவேளை சஜித் பிரேமதாசவின் தந்தையும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாசவும் இந்திய ஜோதிடர்களின் ஆலோசனைகளுக்கு தீவிர முக்கியத்துவம் வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

