சிவனொலிபாதமலைக்கு 3 லட்சத்தை அண்மித்த வகையில் யாத்திரிகர்கள்!

338 0

வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு நேற்றும், இன்றும் சுமார் 3 லட்சத்தை அண்மித்த வகையில் யாத்திரிகர்ள் சிவனொலிபாதமலைக்கு வந்து சென்றிருப்பதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக ஹட்டன் வழியாக நல்லத்தண்ணி செல்லும் பாதையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

சிவனொலிபாதமலைக்கு யாத்திரிகை வந்தவர்களின் வாகனங்கள் மஸ்கெலியா செல்லும் திசையில் ரிக்காட்டன் பகுதிவரை 4 கிலோமீற்றர் தொலைவிற்கு தரித்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.