சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது- எஸ்.பி.திஸாநாயக்க
சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது என்று, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் கிடைத்துள்ளதாகவும், நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டே உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில், நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, குறுக்கு கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான பரீட்சை நிறைவடைந்துள்ளதாக கூறினார். எனினும், ஆளும் தரப்பில்

