கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

371 0

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம்பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளது.

கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள அரச படையினரை அங்கிருந்து அகற்றி மக்களின் காணிகளை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி இந்த பிரேரணையை கூட்டமைப்பு முன்வைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இந்த பிரேரணையை சபையில் முன்வைத்து இன்று உரையாற்றவுள்ளார்.

கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது அகிம்சை வழியிலான போராட்டத்தை 9ஆவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுத்து வருகின்றபோதும், இதுவரை அவர்களுக்குரிய தீர்வு கிடைக்கவில்லை.

பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்விலும் பிலவுக்குடியிருப்பு மக்களின் பிரச்சினை தொடர்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் சபைக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில், இன்றைய தினமும்

பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிப் பிரச்சினை பேசப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.