குவைட்டில் பணிபுரிந்த இலங்கை பெண் 11 வருட வேதனமின்றி நாடு திரும்பினார்.

324 0

குவைட்டில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 வருடங்களுக்கான வேதனப் பணத்தை வழங்காமல், திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குவைட் டைம்ஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.

11 வருடங்களுக்கு முன்னர் ஒப்பந்த அடிப்படையில் குறித்தப் பெண் குவைட் சென்று பணிபெண்ணாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் அவரது ஒப்பந்த வேதனத்தில் 10 சதவீதத்தை மாத்திரமே வழங்கியதாகவும், எஞ்சிய தொகையை சேமிப்பில் வைப்பதாக தொழில்தருணர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் நாடு திரும்ப தீர்மானத்து தமது பணத்தை கோரிய போது, தொழில்தருணர் பணத்தை வழங்க மறுத்துள்ளார்.

இது தொடர்பில் குவைட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் முறையிடப்பட்டுள்ளது.