ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்த இணங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றிருந்தது.

