வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ரியாத்தில் நடைபெற்ற போது கருத்து தெரிவித்த சவூதி அரேபியத் தூதுவர் அஷ்மி தாஸிம், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறினார்.
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவரது இந்த விஜயம் அமையும் என்று அஷ்மி தாஸிம் குறிப்பிட்டுள்ளார்.

