இலங்கையில் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாடொன்றில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
பெண்களுக்கு எதிரான புறக்கணித்தல்களை கலைவதற்கான ஐக்கிய நாடுகளின் குழுவினால் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3ம் திகதி வரையில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
இதில் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இலங்கையில் பெண்கள் முகம் கொடுக்கின்ற புறக்கணிப்புகள் மற்றும் பாதுகாப்பின்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

